"புல் போதையில் கதவின் வழி கையை விட்டு காரை ஓட்டிய கோளாறு" வெளியான பரபரப்பு காட்சி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தெருக்களில் இரவில்
குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற நபரை
போலீஸார் கைது செய்துள்ளனர். டிராகன் மேம்பாலம் அருகே குடிபோதையில் ஓடும் காரின் கதவில் வெளியே தொங்கிய படியே காரை ஓட்டி சென்று, வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்த கார்கள் மீது மோதி நிறுத்தினார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காரை ஓட்டிய சூரஜ் ஜமான் சவ் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவப்
பரிசோதனைக்கு பின், அந்த நபர் குடிபோதையில் இருந்ததை
போலீசார் உறுதி செய்துள்ளனர். தான் ஸ்டண்ட் செய்ததாக
போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.