இந்தியாவுக்குள் கால் வைத்த குரங்கம்மை? பார்த்ததும் பதறிப்போன மருத்துவர்கள்
வெளிநாடு சென்று இந்தியா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்புக்கான அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரங்கம்மை பரவும் நாட்டில் இருந்து சமீபத்தில் பயணம் செய்த ஒரு இளைஞர், குரங்கம்மை அறிகுறி சந்தேகம்படும் நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரை தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.