காலை இந்தியர்..இரவு பிரஞ்சுகாரர்..பாஸ்போர்ட் முதல் பான் கார்டு எல்லாமே டபுள்... டபுள்...

Update: 2024-03-24 08:20 GMT

காரைக்கால் மொய்தீன் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் வடிவேலன். 50 வயதான இவர், அண்மையில் பிரான்ஸ் சென்று திரும்பிய நிலையில், தன்னிடம் பிரஞ்சு குடியுரிமை இருப்பதாக சிலரிடம் தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வடிவேலனிடம் இரு பாஸ்போர்ட், இரு பான் கார்டு, இரு ஆதார் கார்டு இருப்பது தெரியவந்தது. மீசை இருந்தால் இந்திரன்... மீசை இல்லாதவன் சந்திரன்... என்ற ரஜினியின் "தில்லுமுல்லு" பட பாணியில், இந்திய சிட்டிசன் என்றால் வடிவேலன்... பிரான்ஸ் குடியுரிமையுடன் விக்டர்... என ஏமாற்றி வந்தது தெரியவந்தது. மேலும், பிரான்ஸில் குடியுரிமை பெற கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிழந்த சாமிநாதன் விக்டர் என்பவரின் ஆவணங்களை திருடி அதன் மூலம் போலி ஆவணங்களை தயாரித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றதும் அம்பலமானது

Tags:    

மேலும் செய்திகள்