அமைச்சர் வீட்டில் அதிரடி ரெய்டு... சல்லடை போடும் டெல்லி டீம் - பரபரத்த ஜுப்ளி ஹில்ஸ்

Update: 2024-09-27 17:00 GMT

தெலங்கானா மாநில வருவாய் துறை அமைச்சர் மற்றும் அவரின் உறவினர் வீடுகளில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தெலங்கானா மாநில வருவாய் துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீடு, அவருடைய மகளின் வீடு, அவருக்கு சொந்தமாக ஹுமாயத் நகரில் இருக்கும் பண்ணை வீடு, அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட 16 இடங்களில், டெல்லியில் இருந்து வந்துள்ள வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், பலத்த பாதுகாப்பு கிடையே இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், அமைச்சர் சீனிவாச ரெட்டி வீட்டில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்