மத்திய அரசு கொண்டு வந்த புது சட்டத்திற்கு எதிராக மனு.. கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்

Update: 2024-05-20 09:54 GMT

திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாகவும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 106(2) மட்டும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் விஷால்திவாரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் தெரிவித்து, மனுவைத் திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்