குஜராத்தில் உள்ள ரசாயன நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், அம்பர்கான் பகுதியில் செயல்படும் ரசாயன நிறுவனம் ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். ரசாயனங்கள் அதிக அளவில் இருந்ததாக தீ வேகமாகப் பரவியதாக கூறப்படுகிறது.