"தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்த வேண்டும்" கர்நாடக விவசாயிகள் போராட்டம்.
கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபிணி அணைகளிலிருந்து, கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மண்டியா மாவட்டம் இந்டுவாலு பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாட்டு வண்டி மற்றும் டிராக்ட்ரில் வந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை நிறுத்தகோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகள், பெங்களூர் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றபோது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.