டெல்லியில் காற்றின் தரம் ம ிக மோசடைந்து வருவதையொட்டி, கட்டுமான பணிகளை நிறுத்தவும், ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 463 என மோசமடைந்ததையடுத்து, காற்று மாசை தடுப்பதற்கான நான்காம் கட்ட திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதுடன், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியமற்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படாது எனவும், கட்டுமான பணிகளை நிறுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.