"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து" - ஆளுநர் தரப்பில் விளக்கம்

Update: 2023-08-05 11:09 GMT

புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மான கோப்புக்கு ஜூலை 23-ந்தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி கோரும் விவகாரத்தில் சில சமூக அமைப்புகள் துணைநிலை ஆளுநரை குற்றம்சாட்டி தீர்மானம் இயற்றியிருக்கும் செய்தி சில நாளிதழ்களில் வெளியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி அனுப்பப்பட்ட மாநில அந்தஸ்து தீர்மான கோப்புக்கு 23-ந்தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்