நடுவானில் குலுங்கிய விமானம்.. தூக்கி வீசப்பட்ட 30 பயணிகள் - அந்தரத்தில் தொங்கிய பயணி

Update: 2024-07-02 03:32 GMT

ஸ்பெயினில் இருந்து உருகுவே சென்ற விமானம் திடீரென குலுங்கியதால், 30 பயணிகள் காயமடைந்தனர். ஸ்பெயினின் மேட்ரிட்டில் இருந்து உருகுவேவின் மோன்ட்விடியோ நகர் நோக்கி ஏர் யூரோப்பா விமானம் சென்று கொண்டிருந்த‌து. பிரேசில் நேரப்படி அதிகாலை 2.32 மணியளவில் பிரேசில் மேல் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் குலுங்கியது. அப்போது, சீட் பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். பயணி ஒருவர், பெட்டிகள் வைக்கும் இடத்திற்குள் பகுதிக்குள் பாய்ந்தார். அவரை சக பயணிகள் பத்திரமாக மீட்டனர். விமானத்தின் மேல் பகுதி, இருக்கைகள் சேதமடைந்த நிலையில், 30 பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக பிரேசிலுக்கு விமானம் திருப்ப‌ப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்