காஷ்மீரில், ஏற்பட்ட கடும் பனிச்சரிவால், வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, சாலையை மூடிய பனிக்கட்டிகள், பொக்லைன் எந்திரம்மூலம் அகற்றப்பட்டு வருகிறது.