40நாளில் 7முறை... அதுவும் சனிக்கிழமை மட்டும்-தேடி கடிக்கும் பாம்பு `நிஜ' நஞ்சுபுரம் - ஷாக் சம்பவம்

Update: 2024-07-14 13:13 GMT

நாற்பதே நாள்களில் ஒருவரை தேடித்தேடி 7 முறை பாம்பு கடித்துள்ளது...அதுவும் சரியாக சனிக்கிழமையில் தான் பாம்புக் கடிக்கு ஆளாகிறார் அந்த நபர்... இந்த அமானுஷ்ய சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

நஞ்சுபுரம் என்றொரு படம் வந்தது... அடிபட்ட பாம்பு 40 நாள்களுக்குள் தன்னை பலி தீர்த்து விடும் என பயந்து நாயகன் 30 அடி உயரத்தில் குடிசை அமைத்தெல்லாம் பதுங்கி இருப்பார்...

இப்படித்தான் பாம்பு தன்னைப் பழிவாங்கத் துடிக்கிறதோ என தினம் தினம் பதைபதைப்புடனே வாழ்ந்து வருகிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் விகாஷ் துபே...

ஃபதேபூரில் வசித்து வரும் விகாஷை நாற்பதே நாள்களில் பாம்பு 7 முறை கடித்துள்ளது... அதுவும் சரியாக சனிக்கிழமைகளில்...

அப்போதெல்லாம் விகாஷுக்கு விபரீத கனவும் வருகிறது...

அதாவது..."நீ எத்தனை முறை தப்பினாலும்...நான் 9வது முறை கடிக்கும்போது நிச்சயம் உனக்கு மரணம் தான்..." என சாவு பயம் காட்டுகிறதாம் பாம்பு...

ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும் முன்பும் தான் பாம்பால் கடிபடப்போவதை விகாஷுக்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்பு ஏதாவது ஒரு அறிகுறி உணர்த்தி விடுகிறதாம்...

வெளியில் எல்லாம் விகாஷ் பாம்பிடம் கடிபடுவதில்லை...வீட்டில் இருக்கும்போதே தான்...சரி...வெளியே எங்கேயாவது தங்கினாலாவது பாம்பிடம் இருந்து தப்பிக்கலாம் என நினைத்து மாமா வீடு அத்தை வீடு என மாறி மாறி இருந்துள்ளார்...

ஆனால்...எந்தப் பயனும் இல்லை...எங்கு சென்றாலும் விடாது துரத்திக் கடிக்கிறது பாம்பு...

ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குப் போகிறார்...ஆனால் நல்வாய்ப்பாக பிழைத்துக் கொள்கிறார்...இது எப்படி என்பது தான் புரியாத புதிர்...

மருத்துவமனை செலவைத் தன்னாம் சமாளிக்க முடியவில்லை என புலம்பியபடி ஆட்சியர் அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளார் விகாஷ்...

அவரைக் கண்காணிக்க தற்போது மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது...

மீண்டும் பாம்பு பழிவாங்க வருமா?...என விகாஷோடு சேர்த்து மருத்துவர்களும் வியர்த்து விறுவிறுத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்