"சாகும் வரை ஆயுள் தண்டனை.. விசாரணை நீதிமன்றங்கள் வழங்க முடியாது" - கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-08-02 06:46 GMT

பெங்களூருவில், கள்ளக்காதலியின் கணவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சோமசேகர் மற்றும் ராஜேஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாகும் வரை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் மட்டுமே விதிக்க முடியும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, சாகும் வரை ஆயுள் தண்டனையை விசாரணை நீதிமன்றங்கள் விதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர்."சாகும் வரை ஆயுள் தண்டனை.. விசாரணை நீதிமன்றங்கள் வழங்க முடியாது" - கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்