கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு மாத ஊதியம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மாத ஊதியம் பெற்றவர்களுக்கு முழு தொகையும் வழங்கப்பட்டது. அதேநேரம் கூடுதல் சம்பளம் பெறுபவர்களுக்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொகை கிடைக்காததால் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.