'இந்தியா' பெயரை மாற்ற ரூ.14,000 கோடி செலவு" - பகீர் கிளப்பிய சு.வெங்கடேசன்
இந்தியாவின் பெயரை மாற்ற ஆகும் செலவில், தமிழக மாணவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு காலை உணவு வழங்கலாம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் சாசனத்தின் முதல் வரியான 'இந்தியாவின் மக்களாகிய நாங்கள்' மீதே பாஜக தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா பெயர் மாற்றுவதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும், அது, தமிழ்நாட்டில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என்றும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.