உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி , நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்தார்... மீட்புப் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், உணவுப் பொருட்கள் உள்ளே அனுப்பப் பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்... மேலும், மீட்புப்பணி குறித்து நிபுணர்களிடம் பேசி வருவதாகவும், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே தங்கள் முன்னுரிமை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்...