புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள்,ரூ.20 கோடிக்கு டெண்டர்| Parliament
நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டு வரும் நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மக்களவையின் ஆதாரங்களின்படி, கட்டடத்தில் பணிபுரியும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு தடுப்புகள், பிளம்பிங் இணைப்புகள், அலமாரிகள் மற்றும் பிற பர்னிச்சர்கள் உள்ளிட்ட துணைப் பணிகளுக்கு, CPWD நிறுவனம், 6.64 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் மூன்று முற்றங்களில் சேதமடைந்த மணற்கல்லை மாற்ற 5.99 லட்சம் ரூபாய் டெண்டரும் அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பணிகளுக்கான 20 கோடி ரூபாய் டெண்டரும் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-