ஆந்திர மாநிலம், அம்மா பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை, மழையால் நிரம்பியதை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது, தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆறு செல்லும் பள்ளிப்பட்டு, சாமந்தவாடா, சொரக்காப்பேட்டை, நெடியம் கிராமங்கள் வழியாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை புதன்கிழமை மாலை வந்தடையும். இதனால், கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டார்