RBI கொடுத்த பரபரப்பு புகார்...அடிபட்ட 2 மாநிலங்கள்... வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்

Update: 2024-10-12 08:28 GMT

கர்நாடகா மற்றும் கேரளாவில் 50 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்களை, மாற்ற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் வசிக்கும் அப்துல் உசேன் என்பவர், 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, போலி 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததாக, கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 9-ஆம் தேதி ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்த நிலையில், அப்துல் உசேன் கொண்டு வந்தது போலி நோட்டுக்கள் என கண்டுபிடித்ததாக ஆர்.பி.ஐ. வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அப்சல் உசேனை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, ​​கள்ள நோட்டு வர்த்தகம் அம்பலமானது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரளாவில் இருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, போலி 2000 ரூபாய் நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்