கென்யாவில் கொட்டி தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு
கென்யாவில், பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால், தலைநகர் நைரோபி மற்றும் அருகே உள்ள மச்சகோஸ் கவுண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும், உடமைகளை இழந்தும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழை மேலும் தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.