ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ-க்கு காத்திருந்த அதிர்ச்சி... செய்த வினைக்கு விஸ்வரூபம் எடுத்த கர்மா

Update: 2024-09-27 04:53 GMT

ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ-க்கு காத்திருந்த அதிர்ச்சி... செய்த வினைக்கு விஸ்வரூபமாக எழுந்து நின்ற கர்மா

போலி சி.எஸ்.ஆர் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ உட்பட இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனுர் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவியாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் நில விவகாரத்தில் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருவதாக முகமது காசிம் என்பவர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் முகம்மது காசிமிற்கு சொந்தமான 62 சென்ட் நிலத்தின் பத்திரம் தொலைந்து விட்டதாக திருகோகர்ணம் காவல்நிலையத்தில் ரைட்டராக பணிபுரிந்த பலசுப்பிரமணியத்திடம் புகார் அளித்து இருக்கிறார். சி.எஸ்.ஆர் சான்றிதழ் வழங்கினால் டூப்ளிக்கேட் பத்திரத்தைப் பெற்று கொள்வதாகக் கூறி இருக்கிறார்முகம்மது காசிம். இதற்கு பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பலசுப்பிரமணியம் போலியான சி.எஸ்.ஆர் சான்றிதழை வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சான்றிதழை வைத்து தன்னுடைய நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து இருக்கிறார் முகம்மது காசிம். இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற எஸ்ஐ பாலசப்பிரமணியம் மற்றும் இடைத்தரகராகச் செயல்பட்ட மூக்கையன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்