பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகள்.. வைரலாகும் வீடியோ - உடனே பறந்த உத்தரவு
புதுச்சேரி அரசுப்பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிய நடத்துநர் குறித்து விசாரிக்க, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹேவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த அரசுப்பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை நடத்துநர் ஏற்றினார். இதனால் பயணிகளுக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாஹேவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற துணை நிலை ஆளுநரிடம், மாஹே எம்.எல்.ஏ., இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு துணை நிலை ஆளுநர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.