பிறந்தநாள் அன்றே உயிரிழந்த மாணவன்.. காவு வாங்கிய கடல் அலை..! கதறும் பெற்றோர்

Update: 2024-10-28 14:48 GMT

புதுச்சேரியில் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடச் சென்றபோது கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியது.

புதுச்சேரி, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர்கள் திவாகர் மற்றும் மோகன்தாஸ். நண்பரின் பிறந்தநாளை கொண்டாட சக மாணவர்களோடு, இருவரும் வீராம்பட்டினம் கடற்கரை சென்றுள்ளனர். அப்போது கடலில் இறங்கிய மாணவர்களை கடல் அலை இழுத்துச்சென்ற நிலையில், அதனை கண்ட வீராம்பட்டினம் மீனவர்கள் 5 மாணவர்களை மீட்டனர். திவாகர் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் காணமல்போனதை அடுத்து, அரியாங்குப்பம் போலீசார், தீயணைப்புத் துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இருவரது உடலும் அதேபகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்