புதுச்சேரி மக்களை அதிர வைத்த GO? போலீசை மிரள வைத்த சப் கலெக்டர் - பூகம்பத்தை கிளப்பிய சர்வேயர்

Update: 2024-10-11 16:38 GMT

நில மோசடி வழக்கில் காரைக்காலின் சப் கலெக்டர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக இட்டு அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த கூட்டு மோசடி குறித்து பார்க்கலாம் விரிவாக...

சில நாள்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய போலி அரசாணை ஒன்று தற்போது காரைக்காலில் பூதாகரமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

காரைக்கால் மாவட்டத்தின் கோவில்பத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்வதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சுற்றுலா துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்குவது போன்று பரவிய அரசாணையே அது..

அதில், சப் கலெக்டர் ஜான்சன் மற்றும் முன்னாள் மாவட்ட ஆட்சியர், சிறப்பு செயலர் என பல முக்கிய புள்ளிகளின் கையெழுத்துகள் இருந்திருக்கிறது..

இதனால் அதிர்ச்சியடைந்த இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம் புகாரளித்து, உண்மை தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்...

இதனிடையே, காரைக்காலின் சப் கலெக்டரான ஜான்சன் தன் கையெழுத்தை போலியாக இட்டு மர்மநபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக போலீசில் புகாரளித்தது பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறது..

உடனடியாக, முடுக்கி விடப்பட்ட விசாரணையில், இடைத்தரகரான சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது...

கோவில்பத்தில் உள்ள கோயில் நிலத்தை தனிநபருக்கு விற்க முயன்று பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது...

இதில், ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜே.சி. பி. ஆனந்த் மற்றும் நில அளவையர் ரேணுகா தேவி போன்றோருக்கு தொடர்பிருப்பது அம்பலமானது..

இந்நிலையில், வழக்குபதிவு செய்து சிலரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜேசிபி ஆனந்தை தொடர்ந்து தேடி வந்தனர்..

இதனிடையே, கைதான ரேணுகா தேவி விசாரணையின்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்தான் தற்போது காரைக்காலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது...

சப் கலெக்டர் ஜான்சனுக்கும் இந்த கூட்டுச் சதியில் தொடர்பிருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்..

உடனே.. ஜான்சனின் செல்போன் அழைப்புகள் மற்றும் அவரின் வங்கி கணக்கு உட்பட சில ஆவணங்களை போலீசார் ரகசியமாக கைப்பற்றி ஆய்வு செய்திருக்கின்றனர்...

அப்போது.. இந்த மோசடியில் ஒரு பகுதியாக ஜான்சனுக்கு பெரும் தொகை கைமாறியது தெரியவந்திருக்கிறது..

கூடவே, இந்த மோசடி மூலம் சம்பாரித்த கோடிக்கணக்கான பணத்தை.. பிரபல மதுபான உரிமையாளருடன் தொழில் ரீதியாக கை கோர்த்து கொண்டு ஜான்சன் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது..

இதற்கிடையேதான், தன் பெயரில் போலி கையெழுத்தை போலியாக இட்டு மோசடி நடைபெறுவதாக போலீசில் புகாரளித்து ஜான்சன் நாடகமாடியதும் அம்பலமாகி இருக்கிறது..

இந்நிலையில், ஜான்சனை காவல்நிலையம் அழைத்து சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி இருக்கின்றனர்..

இதில், நடுவே தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும், மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறும் கூறி ஜான்சன் அடம் பிடித்திருக்கிறார்..

Tags:    

மேலும் செய்திகள்