புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான நிலையில், ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதி மக்கள் தங்களது கழிவறைகளை பயன்படுத்த முடியாமல், அவதி அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில், இயற்கை அழைப்புக்காக, திறந்த வெளிகளை பயன்படுத்தும் அவல நிலை நிலவுகிறது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பகுதியில், பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு, வீடு வீடாக ஆய்வு நடத்தி வருவது, குறிப்பிடத்தக்கது.