ஏழைகள் அனைவருக்கும் இலவச வங்கி கணக்கு வழங்கும்
ஜன்தன் திட்டம் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை
முன்னிட்டு பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வாழ்த்து
தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை வெற்றியடைய செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜன்தன் திட்டம், கோடிக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதில் முதன்மையானது என
பிரதமர் மோடி குறிப்பிட்டார்.