"மக்கள் மீண்டும் ஆசி வழங்குவார்கள்" - பிரதமர் மோடி உரை

Update: 2024-02-11 06:28 GMT

மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தினம் என்றார். முக்கியமான முடிவுகளை எடுப்பதிலும், நாட்டு மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதிலும் அனைத்து உறுப்பினர்களும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். 17வது மக்களவையின் முயற்சிகளுக்கு இந்திய மக்கள் தொடர்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். 17வது மக்களவையின் செயல்திறனை 97 சதவீதத்திற்கு கொண்டு சென்றதற்கு பாராட்டு தெரிவித்த அவர், 18வது லோக்சபாவின் தொடக்கத்தில் 100 சதவீத உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்