டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு, மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் மற்றும் சுகாதாரத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் காலநிலை குறித்து பிரதமருடன் பேசியதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்வீட்டில், ஒரு அற்புதமான சந்திப்பு அரங்கேறியதாகவும், பல்வேறு துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.