அமிர்த பாரத், வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி | Ayodhya

Update: 2023-12-30 03:18 GMT

அயோத்தியில் புதிய விமான நிலையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையத்தை பிரதமஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி இன்று வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு வருகை தருகிறார்.

ர் திறந்து வைப்பதுடன், அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, விரிவுபடுத்தப்பட்ட சாலைகளை திறந்து வைக்கிறார். மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் உரையாற்றுகிறார். சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளையும் பார்வையிடுகிறார். பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்த போலீசார், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்