மக்களவையில் கடும் அமளிக்கிடையே அடுத்தடுத்து 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவை காலை கூடியதும், கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்தது. எனினும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆணைய மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.