ஆன்லைனில் தீர்ப்பு ....1 லட்சம் அபராதம்... அப்பாவி மக்களை ஏமாற்றிய போலி நீதிபதி...

Update: 2023-07-30 00:47 GMT
  • ஒயிட் அன் ஒயிட்டில் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கைகட்டி நின்று கொண்டிருக்கும் இவர் தான், ஆன்லைனில் நீதிமன்றத்தை நடத்தி, அப்பாவி மக்களிடம் பல லட்சங்களை ஆட்டையை போட்ட போலி நீதிபதி..
  • கைத்துப்பாக்கியுடன் பந்தோபஸ்து....
  • கொள்ளையன் டூ சிவில் நீதிபதி...
  • லட்சங்களில் போடப்பட்ட அபதாரம்...?
  • பணம் பறிக்க சட்டத்தை கையில் எடுத்தவர் சிக்கியது எப்படி.
  • மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கர்லபதி சோமிரெட்டி. இந்த பெண்மணிக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
  • கோர்ட்டு, கேஸு என பல முறை சுற்றி திரிந்தும், பிரச்சனை மட்டும் தீரவே இல்லை.இந்நிலையில் தான் நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண வழிதேடி திரிந்த கர்லபதி, இணையத்தில் இயங்கிய வந்த ஒரு நீதிமன்ற பக்கத்தை கண்டிருக்கிறார்.
  • உடனே அந்த பக்கத்தில் தனது நில வழக்கை தகவல்களை பதிவிட்டுள்ளார். கர்லபதிக்கு அந்த பக்கத்தில் இருந்து நிலப்பிரச்சனையை தீர்க்க 1 லட்சம் செலவாகும் என கூறி இருக்கிறார்கள். அதற்கு சம்மதித்து பணத்தை ஆன்லைனிலேயே அனுப்பி வைத்திருக்கிறார் கர்லபதி.
  • உடனே வழக்கு முடிந்ததாக சொல்லி நீதிபதியின் தீர்ப்பு அறிக்கையை அனுப்பி உள்ளனர். இதனால் நிம்மதி பெருமூச்சு அடைந்த கர்லபதி அந்த ஆர்டரை, நிலம் தொடர்பாக பிரச்சனை செய்து வந்த நபர்களிடம் காட்டி, வழக்கு தனக்கு சாதகமாக முடிந்துவிட்டு இடத்தை காலி செய்யும் படி கூறி உள்ளார்.
  • அப்போது தான் அது ஒரு போலி ஆர்டர் என்று தெரிந்திருக்கிறது. உடனே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கர்லபதி உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
  • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த இணைய பக்கத்தை நடத்தி வந்த தெலுங்கான மாநிலம் வெமுலவாடாவை சேர்ந்த நமலா நரேந்திரன் மற்றும் மதுசூதன ரெட்டி ஆகிய இரண்டு நபர்களை வலைவீசி தேடி பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.
  • அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
  • கைது செய்யப்பட்ட நமலா நரேந்திரன் ஒன்றும் நீதிபதி அல்ல... அவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி.
  • தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2014 ஆம் ஆண்டு கொள்ளை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்ற நரேந்திரன், 2018 ஆம் ஆண்டு வெளியே வந்துள்ளார்.
  • அன்று முதல் ஆஃப் லைன் கொள்ளை திட்டங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிதாக தீட்டிய திட்டம் தான் இந்த ஆன்லைன் நீதிமன்றம்.
  • அதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் சந்தோஷை சந்தித்து, அவரது உதவியுடன் தெலுங்கான உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நரேந்தர் போலி சுயவிவரத்தை உருவாக்கி இருக்கிறார்.
  • இணையத்தில் நரேந்தரின் தகவல்களை கண்ட முன்னாள் ராணுவ வீரர் மதுசூதனன், நரேந்தர் உண்மையான நீதிபதி தான் என்று நம்பி, தனது நிலப்பிரச்சனையை தீர்த்துவைக்க உதவி கேட்டிருக்கிறார்.
  • இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நரேந்தர் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன், அதற்கு உபகாரமாக எனக்கு நீங்கள் துப்பாக்கி ஏந்திய பந்தோபஸ்து கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
  • நீதிபதிக்கு உண்டான அனைத்தையும் போலியாக உருவாக்கி கொண்டு இணையத்தில் வீசிய வலையில் தான் கர்லாபதி சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்.
  • கர்லபதியை ஏமாற்றி விட்டு அடுத்த ஆப்ரேஷனில் இறங்கிய நரேந்திரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.
  • இதே பாணியில் ஆன்லைனில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி பலரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது விசாரனையில் தெரிய வந்திருக்கிறது.
  • மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், ஒரு கார், போலி நீதிபதி அடையாள அட்டை, 7500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
  • அந்த கைத்துப்பாக்கிக்கு சரியான உரிமம் உள்ளதா? எனவும் விசாரனை நடத்தி வருகின்றனர்.
  • முழு விசாரனைக்கு பிறகே நரேந்திரனின் வலையில் எத்தனை பேர் சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்கள் என்று தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்