புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு - வெளியான முக்கிய லிஸ்ட்..!

Update: 2024-03-14 13:10 GMT

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணைய அமர்வில் இரண்டு தேர்தல் ஆணையர்களின் பணியிடங்கள் காலியாக இருந்தது. இரண்டு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, பிரதமர் மோதி தலைமையில் அவரது இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனை நடைபெற்றது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனையின் முடிவில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தகவலை உயர்மட்ட ஆலோசனை குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுதி செய்துள்ளார். மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்