"புதிய கிரிமினல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்" - அறிவிக்கை வெளியிட்ட மத்திய அரசு
புதிய கிரிமினல் சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநியம் ஆகியவரை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் அவை, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. லாரி உரிமையாளர் சங்கத்தினரின் போராட்டத்திற்கு வித்திட்ட, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் வாகன ஓட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி செய்யும், சட்டப்பிரிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது