டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் இரண்டு நாள் தேசிய மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர்
மோடி, உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டு காலம் என்பது வெறும் ஒரு அமைப்பின் பயணம் மட்டுமல்ல, நமது இந்திய அரசியல் சாசனம், அவற்றின் விழுமியங்கள் ஆகியவற்றின் பயணம் என தெரிவித்தார். இந்தியா மேலும் முதிர்ச்சி கொண்ட ஜனநாயகமாக உருவெடுத்து வருகிறது என்பதை உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் சுட்டிக் காட்டுவதாக குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என தெரிவித்த பிரதமர், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து முடிவெடுக்கும் போது, நாட்டில் உள்ள பெண்களுக்கு பெருமளவு பாதுகாப்பு உணர்வை அது அளிக்கும் என தெரிவித்தார்.