"மோடி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்.." போராட்டமாக மாறும் டெல்லி முதல்வரின் கைது..வெளியான அறிவிப்பு
செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மாநில அமைச்சர் கோபால் ராய், அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது குடும்பத்தினரையே சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். இன்று ஷஹீதி பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இதில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்துகொள்வார் என்றும் தெரிவித்தார். 24ஆம் தேதி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரதமரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்றும், 25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடாமல் மக்களை சந்திப்போம் என்றும் கூறினார். 26ஆம் தேதி பிரதமரின் இல்லம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கோபால் ராய் தெரிவித்தார்.