மருத்துவ கல்லூரியில் பயங்கர விபத்து - மாணவர்களின் நிலை என்ன? உத்தர பிரதேச மாநிலம் மீரட் மருத்துவக் கல்லூரியில் உள்ள மகளிர் மருத்துவப் பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அறையில், இன்று காலை ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 2 ஏசி திறன் கொண்ட வயரிங் மூலம் 6 ஏசிகள் இயக்கப்பட்டதால், ஷார்ட் சர்க்யூட் மற்றும் சுமை அதிகரிப்பால் ஏசி வெடித்து சிதறியது. எனினும் தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ௬ தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தன.