மாணவரை மத ரீதியாக ஆசிரியர் விமர்சித்த விவகாரம் - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Update: 2023-09-06 17:55 GMT

மாணவரை மத ரீதியாக ஆசிரியர் விமர்சித்த விவகாரத்தில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சக மாணவரைக் கொண்டு மற்றொரு மாணவரை ஆசிரியர் அடிக்க செய்தது குறித்த விசாரணை, பாதிக்கப்பட்ட மாணவருக்கான பாதுகாப்பு குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்