முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட டெல்லியில் சுமார் 5 ஆயிரத்து 500 மூத்த வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் விருப்பமுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வாக்குகளை பெற்று வருகின்றனர்.