குப்பையால் துடிதுடிக்க இறந்த பெண்... ஈரக்குலையை நடுங்க வைத்த சம்பவம்

Update: 2023-10-08 05:23 GMT

புதுச்சேரி அரியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சமூர்த்தி என்பவருக்குமிடையே வீட்டு குப்பைகளை கொட்டுவதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், பஞ்ச மூர்த்தியின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவருக்கு குழந்தை ஏதும் பிறக்காது என கோவிந்தம்மாள் சாபம் விட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த பஞ்சமூர்த்தி தான் பணிபுரிந்து வந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து, கோவிந்தம்மாளை அடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், பஞ்சமூர்த்தியை கைது செய்திருக்கும் நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்