திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த 'உயிரே' பட நடிகையின் தந்தை...ஷாக்கில் திரையுலகம்
தபாங்க், கப்பர் சிங், ஹவுஸ் புல் போன்ற போன்ற ஹிட் படங்களில் நடித்து பாலிவுட்டை கலக்கி வருபவர் நடிகை மலைகா அரோரா.. தமிழில்.. ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் "தைய.. தையா.." பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்... தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் நடித்தும், டிவி ஷோ நிகழ்ச்சிகளாலும் பாலிவுட்டில் கோலோச்சி வரும் மலைகா அரோரா, தன் தந்தை அனில் அரோராவுடன் மும்பை, பாந்த்ரா நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.. குடியிருப்பின் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை இந்நிலையில், மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, அவரது தந்தை குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும் போதே, அவரின் பெற்றோர் விவாகரத்து பெற்று ஒருவரையொருவர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது...
இந்த சூழ்நிலையில், மலைகா அரோராவும், அவரின் சகோதரியும் தங்கள் தாயின் அரவணைப்பில் வளர்ந்துதான் இந்த நிலைமைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது...தற்கொலையா... வேறு ஏதும் காரணமா? - போலீசார் விசாரணை இப்படி இருக்க, திடீரென மலைகா அரோராவின் தந்தை எடுத்திருக்கும் விபரீத முடிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
இந்த விவகாரம் அறிந்த உடனே, மலைகா அரோராவின் முன்னாள் கணவரும், நடிகருமான அர்பாஸ் கான், சம்பவம் நடந்த குடியிருப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.. 19 ஆண்டுகள் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த அர்பாஸ் கான் - மலைகா அரோரா தம்பதி.. அண்மையில்தான் விவாகரத்து பெற்று பிரிந்திருக்கின்றனர்... இந்நிலையில், மலைகா அரோராவின் தந்தை அனில் அரோராவின் தற்கொலை செய்தி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், மரணம் தற்கொலைதானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...