மகாராஷ்டிரா தேர்தல்..! பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Update: 2024-10-21 01:54 GMT

மகாராஷ்டிரா தேர்தல்..! பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | Maharashtra எலேச்டின்


288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் மொத்தமாக 150 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் 99 தொகுதிகளில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், மும்பை பா.ஜ.க. தலைவர் ஆஷிஷ் செலார் வந்தேரா தெற்கு தொகுதியிலும், பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயண ராணேவின் மகன் நிதின் ராணே கான்காவ்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மகராஷ்டிர பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், முன்னாள் தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கொத்ரூட் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அஷோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்