செல்ஃபி எடுக்கும் போது 150 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த பெண் - அலறிய நண்பர்கள்.. திக் திக் நொடிகள்
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள போர்ன் காட் என்ற இடத்தில் செல்ஃபி எடுக்கும்போது பெண் ஒருவர் 150 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... குழுவாக சுற்றுலா சென்ற போது ஒரு பெண் மலை உச்சியில் நின்று செல்டி எடுத்துள்ளார்...அப்போது கால் தவறி அவர் 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த நிலையில்
பயந்து போன நண்பர்கள் போலீஸாருக்கும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர்... சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் அப்பெண்ணை பத்திரமாக உயிருடன் மீட்டனர்... கீழே விழுந்ததில் காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...