வச்சதும் எடுத்ததும் ஒரே ஆள்.. போலீசாரின் ஜோடிக்கப்பட்ட ரெய்டு.. காட்டி கொடுத்த சிசிடிவி
மும்பையில், சோதனையின் போது போதை பொருளை இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்து அவரை கைது செய்த 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவலர்கள், அதே பகுதியை சேர்ந்த இளைஞரிடம போதைப்பொருள் உள்ளதா என சோதனை நடத்தினர். அப்போது, போலீசார் ஒருவர் அவரது பாக்கெட்டில் இருந்த எடுத்த போதை பொருளை இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். பின்னர் போதைப் பொருள் கடத்தியதாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கர் காவல் நிலையத்தை சேர்ந்த 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.