ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவன்.. வக்கிரத்துக்கு கொடூர தாயும் உடந்தை..

Update: 2024-07-29 07:32 GMT

மத்தியபிரேதச மாநிலம் ரோவா மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி நடந்த சம்பவம் அது...

9 வயதேயான சிறுமி ஒருவரை, அவரின் வீட்டருகே சடலமாக கண்டு ஊரே அலறி இருக்கிறது...

தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம்... விஷப் பூச்சி கடித்து தன் மகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என சிறுமியின் தாய் கண்ணீர் வடித்திருக்கிறார்..

தொடர்ந்து, சிறுமியின் சகோதரிகளும், தாய் சொன்னதையே முன்வைத்து அழுதிருக்கின்றனர்..

மேற்கொண்டு விசாரணை நடத்திய போலீசாரிடம் மூவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீசார், பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடலை பெற்று உடற்கூராய்வுக்காக மருத்துவமனை கொண்டு சென்றிருக்கின்றனர்...

அங்குதான் பேரதிர்ச்சி காத்திருந்தது...

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார் என்றும்... அதன் பின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் உடற்கூராய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது..

உடனே, விசாரணையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில், தலையில் பேரிடியாய் வந்து விழுந்தது அடுத்த செய்தி..

சிறுமியின் அண்ணனான 13 வயது சிறுவனால், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது...

13 வயதில், தனக்கென தனி செல்போன் என எந்நேரமும் கையில் போனுடன் திரிந்த சிறுவன்... தொடர்ந்து இரவு நேரங்களில் தனியே சென்று ஆபாச படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்...

இப்படி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகி தறிகெட்டுப்போன அந்த சிறுவனின் பார்வையில், சம்பவத்தன்று வீட்டில் தனியே இருந்த அவரின் தங்கை சிக்கிய நிலையில், இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது...

9 வயது தங்கையை, அவரின் 13 வயது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்...

தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாயிடம் சொல்வதாக சொன்ன சிறுமியை, அந்த சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்...

இதனையறிந்த தாய்... மகனை காப்பாற்ற எண்ணி... தன் மூத்த மகள்களான 17 மற்றும் 18 வயது சிறுமிகளுடன் சேர்ந்து இளைய மகளை விஷப் பூச்சி கடித்ததில் அவர் இறந்ததாக நாடகமாடியதுதான் இந்த ஒட்டுமொத்த கோரச் சம்பவமும்...

சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவமும், இதன் பின்னணியில் அவரின் தாய் நிகழ்த்திய நாடகமும் மனதை ரணமாக்கி இருக்கும் நிலையில், சிறுவனை கைது செய்திருக்கும் போலீசார், அவரின் தாய் மற்றும் சகோதரிகளை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்