சாமி கும்பிட்டுவிட்டு சாமி சிலையிலேயே கை வைத்த கொள்ளை கும்பல்.. வைரலாகும் வீடியோ
சாமி கும்பிட்டுவிட்டு சாமி சிலையிலேயே கை வைத்த கொள்ளை கும்பல்.. வைரலாகும் வீடியோ
மத்திய பிரதேசத்தில் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு கொள்ளைக் கும்பல் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது
குணாவில் இருக்கும் அனுமன் கோயிலுக்குள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு கொள்ளைக் கும்பல் நுழைந்துள்ளது. காவலாளியை மரத்தில் கட்டிவைத்துவிட்டு 4 பேர் காவலுக்கு நிற்க, 2 பேர் கோயிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு சாமியை பயப்பக்தியோடு தொட்டுக் கும்பிட்டவர், நைசாக கதாயுதத்தை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். அடுத்தது உள்ளே சென்ற இரண்டாவது கொள்ளையர், வெள்ளி குடை... கதாயுதம்... கிரீடம்... செயின்களை ஒவ்வொன்றாக கழற்றி சாக்கு பையில் போட்டு அதைக் கொண்டுச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருக்கிறது. துளசி மாலையை மட்டும் விட்டுவிட்டு, அனுமன் அலங்காரத்திலிருந்த துளசி மாலையை மட்டும் விட்டுவிட்டு அத்தனை பொருட்களையும் கொள்ளைக் கும்பல் கொள்ளையடித்து சென்றிருக்கிறது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த திருட்டு அந்த கோயிலில் நடக்கும் 4 ஆவது திருட்டு எனவும் சொல்லப்படுகிறது. கோயில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது