"அப்பாவ புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.." - போலீசில் புகாரளித்த 5 வயது சிறுவன்
மத்தியப்பிரதேச மாநிலத்தில், 5 வயது சிறுவன், தனது தந்தைக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தார் மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுவன், தான் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, தனது தந்தை தடுத்து நிறுத்தி தன்னை திட்டியதாக தெரிவித்துள்ளான். இதற்காக புகார் அளிக்க காவல்நிலையம் வந்துள்ளதாகவும் கூறினான். இதுகுறித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நடவடிக்கை எடுப்பதாகக்கூறி சிறுவனை அனுப்பிவைத்தனர்.