லடாக்கில், உடல் திறனை மேம்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகள் இணைந்து 5 நாட்கள் நடத்திய இந்த முகாமில், உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். லடாக்கில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப, தங்கள் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கும் வகையில் கராத்தே பயிற்சியும், மனதளவில் உறுதியாக இருக்க தியானப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.