கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் பாதுகாப்பைஉறுதி செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனைகளை கட்டாய பாதுகாப்பு உரிமை கொண்ட பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் விமான நிலையத்தைவிட குறைவாக இருக்க கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவிகள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலை 6 மணி முதல் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது எனவும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.