கேரள மாநிலம் மலப்புரத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கருவரகுண்டு பகுதியில் பெய்த கனமழையால், ஒலிப்புழா, கல்லன்புழா ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரங்களில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.