களமிறங்கும் Maj.Gen. இந்திர பாலன் குழு.. இரும்பு கரம் கொண்டு இரும்பு பாலம்...1600 பேரை காத்த ராணுவம்
வயநாடு நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவம், தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். சடலங்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்காக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் இந்திர பாலன் குழுவினரின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை கடற்படையால் வழங்கப்பட்டு வருகிறது. சாலியாற்றில் இழுத்து வரப்பட்ட 98 சடலங்கள் மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட நிலையில், 75 சடலங்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 592 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்திலும் நேற்று பெய்த மழை காரணமாக மழை நீர் பாய்ந்தோடிய நிலையில், இன்று கட்டுமான பணிகள் நிறைவடைந்தால் பெய்லி பாலம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இந்த பாலத்தின் மூலம் மண் அள்ளும் எந்திரங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வயநாடு நிலச்சரிவில் 28 குழந்தைகள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.